BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday, 17 July 2014

வரலாறு காணாத ஆட்குறைப்பை மேற்கொள்ள இருக்கிறது , மைக்ரோசாப்ட் நிறுவனம் !!!


உலகின் முன்னனி நிறுவங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது நிறுவனத்தில் பணி செய்பவர்களில் 18,000 பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கம் செய்ய உள்ளது . இது அந்த நிறுவனத்தின் பணியாளர்களின் 14 சதவீதம் ஆகும் . இந்த ஆட்குறைப்பு இப்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வாங்கப்பட்ட நோக்கியா நிறுவனத்தில் கடுமையாக இருக்கும் . நோக்கியா நிறுவனத்தில் வேலை செய்யும் 12,500 பேர் வேலை விட்டு நீக்கப்படுவர் .

இது குறித்து தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா எழுதிய கடிதத்தில் , இந்த வேலைக்க்குறைப்பு நிறுவனத்தின் வேலை யூனிட்களை ஒன்றினைக்கவும் , முன்னேற்ற பாதை நோக்கி முன்னேறவும் உறுதுணையாக இருக்கும் . முதல் கட்டமாக 13,000 பேரின் வேலையை விட்டு நீக்க உள்ளோம் . வேலையை விட்டு நீக்கம் செய்ய உள்ளவர்களுக்கு அடுத்த ஆறு மாதங்களுக்குல் தகவல் தெரிவிக்கப்படும் . மேலும் இது குறித்த அடுத்த தகவலை விவரமாக ஜூலை 22 ஆம் தேதி அறிவிப்பதாக கடிதத்தில் கூறி இருந்தார் .

நோக்கியா நிறுவனத்தை வாங்கிய பின்ன மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் 1,27,000 பணியாளர்கள் பணி செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies