BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday, 17 July 2014

தொலைவிலிருப்பவர்கள் ஒருவருக்கொருவர் கரங்களைப் பற்றிக்கொள்ள உதவும் உபகரணம்!(படங்கள் மற்றும் காணொளி)

ஒருவருக்கொருவர் நீண்ட தொலைவிலுள்ள காதலர்கள் ஒருவர் முகம் பார்த்து ஒருவர் உரையாடுவதற்கு ‘ஸ்கைப்’ போன்ற இணையத்தள தொடர்பாடல் சேவைகள் உதவுகின்ற போதும் காதலர்கள் ஒருவர் கரத்தை ஒருவர் பற்றி அன்பை வெளிப்படுத்துவது சாத்தியமில்லாது இருந்தது.

இந்நிலையில் நெதர்லாந்தின் அம்ஸ்டர்டாம் நகரைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ‘பிரெப்பிள்ஸ்’ என அழைக்கப்படும் தொலை தூரத்திலுள்ளவர்கள் ஒருவருக்கொருவர் தொடுகை உணர்வைப் பெறுவதற்கு வழிவகை செய்யும் தொழில்நுட்ப உபகரணங்களை உருவாக்கியுள்ளனர்.

கம்பியில்லா தொழில்நுட்பத்தின் மூலம் செயற்படும் இந்த உபகரணம் ஒருவர் தனது அன்புக்குரியவர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவரது கரத்தைப் பற்றி அன்பை வெளிப்படுத்துவதற்கு வழிவகை செய்கிறது.

தூர இடங்களில் இருக்கும் காதலர்கள் தம்மிடமுள்ள ‘பிரெப்பிள்ஸ்’ உபகரணத்தைப் பயன்படுத்தி கரத்தைப் பற்றும் உணர்வை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொள்ள முடியும்.

கீழே காணொளி பாருங்கள்:

இந்த உபகரணத்தை ஸ்கைப் Facetime, மற்றும் பிரேப்பில் ஆப்ஸ் போன்றவற்றுடன் இணைத்துப் பயன்படுத்த முடியும்.


மேற்படி ஒரு ஜோடி உபகரணங்களின் ஆகக்குறைந்த விலை 89 அமெரிக்க டொலராகும்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies