BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Sunday, 13 July 2014

நைஜீரியா: கடத்தப்பட்ட பள்ளிமாணவிகளின் பெற்றோர்களுக்கு மலாலா ஆறுதல். இன்று அதிபரை சந்திக்கிறார்.

நைஜிரியால் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் பள்ளி மாணவிகள் சுமர் 200 பேர்களை அந்நாட்டில் உள்ள ஹாராம் என்ற தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். அவர்களில் ஒருசில மாணவிகள் தப்பிவிட்டாலும் இன்னும் நூற்றுக்கணக்கான மாணவிகள் தீவிரவாதிகளின் பிடியில் உள்ளனர். நைஜீரிய அரசு உலக நாடுகளின் உதவியோடு ஹாராம் தீவிரவாதிகளை அடக்க போராடி வருகிறது.

இந்நிலையில் தலிபான் தீவிரவாதிகளால் படுகாயம் அடைந்து உயிர் பிழைத்த மலாலா, நைஜீரியா நாட்டிற்கு நேரில் சென்று கடத்தபட்ட மாணவிகளின் பெற்றோர்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி வருகிறார்

நைஜீரிய தலைநகர் அபுஜாவில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சந்திப்பில் கடத்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் மலாயா முன்பு கண்ணீர் விட்டு அழுத காட்சி கல்நெஞ்சையும் கறைய வைப்பதாக இருந்தது.

இன்று மலாலா தனது 17 வது பிறந்தநாளை மாணவிகளின் பெற்றோர்களுடன் கொண்டாடும் அவர், கடத்தப்பட்ட மாணவிகளை மீட்க உலகத்தலைவர்களுடன் பேசி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் நைஜீரிய அதிபர்  குட்லக் ஜொனாத்தன் அவர்களை இன்று அவரது மாளிகையில் சந்தித்து பேசுகிறார். கடத்தப்பட்ட மாணவிகளை மீட்டுத்தருவது மட்டுமே எனக்கு அளிக்கப்படும் சிறந்த பிறந்தநாள் பரிசு என்று அவர் அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக உலகத்தலைவர்களை மலாலா சந்திக்க உள்ளதாகவும், விரைவில் உலகநாடுகளின் மீட்புப்படைகள் இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட வேண்டும் என்றும் மலாலா வற்புறுத்தி வருகிறார்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies