கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் உத்தமவில்லன் படப்பிடிப்பில் அவருடன் நடித்த நாயகிகளுள் ஒருவரான பூ பார்வதி திடீரென மயங்கி விழுந்ததால் படப்பிடிப்பு குழுவினர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தம வில்லன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கமல்ஹாசன் இருவேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் பூஜா குமார், ஆண்ட்ரியா மற்றும் பார்வதி ஆகியோர் ஜோடிகளாக நடித்து வருகின்றனர்.
பூஜாகுமாரின் காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிந்துவிட்டதாகவும், தற்போது கமல்ஹாசன் -பார்வதி சம்மந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கமல்ஹாசனுடன் முதன்முதலாக நடிக்கும் பார்வதி படப்பிடிப்பில் மிகவும் டென்ஷனோடும் பயத்துடனும் இருந்ததாக கூறப்படுகிறது.
முதல்நாள் படப்பிடிப்பில் கமல்ஹாசனுடன் முக்கிய காட்சிகளில் நடித்துக்கொண்டிருந்த பார்வதி, கமல்ஹாசன் முன்னால் நடிப்பதற்கு பயந்து முதல் ஷாட்டிலேயே மயக்கமடைந்து விழுந்துவிட்டாராம். பின்னர் பார்வதியின் பயத்தை புரிந்துகொண்ட கமல்ஹாசன் அவரை தனியாக கேரவனுக்கு அழைத்து சென்று அவருடன் சகஜமாக பேசி பழகி அவருடைய பயத்தை போக்கியுள்ளார். பின்னர் பார்வதி தைரியமடைந்து கமல்ஹாசனுடன் நடித்ததாக படப்பிடிப்பு குழுவினர் கூறுகின்றனர்.