BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday, 16 July 2014

வேட்டி விவகாரம் : தமிழர்களின் கலாச்சாரத்துக்கு எதிரான கிளப்புகளின் மேல் நடவடிக்கை - முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு !!



தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழர்களின் கலாச்சாரத்திற்கு எதிராக செயல்படும் தனியார் கிளப்களின் அனுமதி ரத்து செய்யப்படும்  எனவும் , அதற்கான மசோதா விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார் .

இதுகுறித்த அறிக்கையில் தமிழக முதல்வர் அந்த சம்பவத்துக்கு தன் கண்டனத்தை பதிவு செய்தார் . மேலும் இதற்கு முன்னர் நடந்த இதுபோன்ற சம்பவங்களை சுட்டிக்காட்டி அதற்கு அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதைக் கூறினார் .

மேலும் வேட்டி கட்டியதால் அனுமதிக்கப்படாததால் , மொத்த ஆங்கிலேய அரசையும் பணிய வைத்த சர். தியாகராயர் கதையைக் கூறினார் . இது குறித்து விளக்கம் அளிக்குமாறு , தமிழக கிரிக்கெட் சங்க மன்றத்திற்கு கடிதம் அனுப்ப உத்தரவிட்டுள்ளார் .

மேலும் இது போன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண , இனிமேல் இதுபோன்று தமிழர்களின் கலாச்சாரத்திற்கு எதிராக ஈடுபடும் மன்றங்களுக்கு அனுமதி ரத்து செய்யும் மசோதாவை விரைவில் நிறைவேற்றுவோம் என்றார் .


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies