இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டிற்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில் இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது.
முதலில் நாணயசுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி, இந்தியாவை துடுப்பெடுத்தாடுமாறு பணித்ததை தொடர்ந்து, இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜயும், ஷிகர் தவானும் களமிறங்கினர்.
ஆரம்பத்திலிருந்தே ஷிகர் தவான் பந்துகளை சந்திக்க தடுமாறிய நிலையில் ஆண்டர்சன்னின் 3வது ஓவரில் பேலன்சிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதனால் விஜய்யுடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடிய நிலையில் சிறிது நேரத்தில் விஜய்யும் பிளாங்கட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் புஜாராவுடன் பார்மில் இல்லாத கோஹ்லி ஜோடி சேர்ந்தார்.
கோஹ்லி அதிரடியாக ஆட, புஜாரா நிதானமாக விளையாடி வருகிறார். உணவு இடைவேளையின் போது இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 73 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
உணவு இடைவேளைக்குப் பிறகு கோஹ்லி 26 ஓட்டங்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின்னர் ரகானேவுடன் இணைந்த புஜாரா மிகவும் நிதானமாக ஓட்டங்கள் சேர்த்தார்.
நீண்ட நேரம் ஆடிய அவர் 28 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். டோனி (1), ஜடேஜா (3), பின்னி (9) ஆகியோர் விரைவில் பெவிலியன் திரும்பினர்.
இதனைத் தொடர்ந்து ரஹானேவுடன் ஜோடி சேர்ந்த புவனேஷ்வர் குமார் நிதானமாக ஆடி ஓட்டங்களை குவித்தனர், ரஹானே சதம் அடித்தார், ஆட்டநேர முடிவில் இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்து 290 ஓட்டங்கள் எடுத்தது.
இஷாந்த் ஷர்மா மற்றும் மொஹமத் சமி களத்தில் உள்ளனர், இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.