உக்ரைன் நாட்டில் பதற்றம் நீடிக்கும் வகையில் கோபமூட்டும் நடவடிக்கையில் ரஷ்யா அடிக்கடி ஈடுபட்டு வருவதால் ரஷியா மீது புதிய பொருளாதாரத் தடையை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் சேர்ந்து நேற்று விதித்துள்ளன. இதற்கு ரஷ்ய அதிபர் புதின் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த பொருளாதார தடை ரஷியாவின் நிதி நிறுவனங்கள், எரிசக்தித் துறை மற்றும் ஆயுதம் சார்ந்த உபகரணங்கள் துறை ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ளதால் ரஷ்யாவை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும் என தெரிகிறது.
உக்ரைன் நாட்டின் இறையாண்மைக்கும், பொது சொத்துகளுக்கும் சேதம் விளைவிக்கும் வகையில் ரஷியா தொடர்ந்து ஈடுபட்டு வந்து கொண்டிருப்பதால்தான் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.
இந்த பொருளாதார தடைக்கு ஒப்புதல்வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா "உக்ரைன் விஷயத்தில் பலமுறை எச்சரித்தும் ரஷியா தொடர்ந்து எரிச்சலூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டே இருக்கின்றது. எனவே, ரஷ்யாவை எச்சரிக்கும் பொருட்டே அந்த நாட்டின் பெரிய நிறுவனங்கள் மற்றும் நிதி அமைப்புகள் மீது புதிய பொருளாதாரத் தடை விதிக்க இன்று கையொப்பம் இட்டுள்ளேன் என்று கூறினார்.
அமெரிக்க நீதித்துறை துணை அமைச்சர் டேவிட் எஸ்.கோஹன் கூறுகையில், ""உக்ரைன் நாட்டில் தொடர்ந்து பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் உக்ரைன் பிரிவினைவாதிகளுக்கு ரஷியா தொடர்ந்து ஆயுதங்கள் அளித்தும் பயிற்சி அளித்தும் வருகிறது. இதுகுறித்து ரஷ்ய அரசிடம் இருந்து வெளிவரும் அறிக்கைகள் முற்றிலும் முரண்பாடாக உள்ளன'' என்றார்.
இதேபோல், பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய யூனியன் தலைவர்களும் ரஷியா மீது கடும் பொருளாதாரத் தடையை நேற்று விதித்துள்ளனர். இந்த தடை காரணமாக புதிய ஐரோப்பிய வங்கி அளித்து வரும் நிதியுதவி நிறுத்தப்பட்டது.
ரஷ்யாவின் மீது விதிக்கப்பட்டுள்ள இந்த பொருளாதாரத் தடையால் தங்கள் நாட்டிற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும், அவற்றை விதித்துள்ள நாடுகளையே இது திரும்பத் தாக்கும் என்று ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் எச்சரித்துள்ளார்.