BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday, 23 July 2014

ராணியாக வலம் வரயிருக்கும் சார்மி

சிம்பு கதாநாயகனாக அறிமுகமான காதல் அழிவதில்லை என்ற படம் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு நாயகியாக அறிமுகமானவர் சார்மி.இந்த படத்திற்கு பிறகு ஆஹா எத்தனை அழகு, காதல் கிசு கிசு போன்ற சில படங்களில் நடித்தார்.ஆனால் சார்மிக்கு தமிழில் அதிக பட வாய்ப்புகள் அமையவில்லை. தெலுங்கில் சில காலம் முன்னணி நாயகியாக இருந்த சார்மி, காலபோக்கில் சின்ன பட்ஜெட் படங்களில் நடிப்பது, ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடுவது, கன்னடப் படங்களில் நடிப்பது என்று காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் கங்கனா ரணாவத் நடிப்பில் ஹிந்தியில் சூப்பர் ஹிட் ஆன 'குயின்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க இருக்கிறார் சார்மி. இந்த குயின் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்படவுள்ளது. தெலுங்கு ரீமேக்கில் முன்னணி நாயகிகளான த்ரிஷா, நயன்தாரா போன்றவர்களை அணுகினால் அதிக படியான சம்பளம் கேட்கின்றனராம்.இதனால் சார்மி தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் பிரபலமான நடிகை என்பதால் மூன்று மொழிகளிலும் அவரையே நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனராம்.  


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies