இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்னுடன் சண்டையில் ஈடுபட்டதால் இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ஆட்டத்தொகையில் பாதியை அபராதமாக செலுத்த உத்தரவிட்டு உள்ளது.
முதல் டெஸ்டின் 2 ஆம் நாள் ஆட்ட இடைவேளியின் போது இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆண்டர்சன் கோபமாகி ஜடேஜாவை தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து இந்திய அணி ஆண்டர்சன் மீது புகார் அளித்து இருந்தது. பதிலுக்கு இங்கிலாந்து அணி ஜடேஜா மீது புகார் அளித்தது. இது விசாரணையில் இருந்தது .
இதில் ஜடேஜாவுக்கான தண்டனை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆன்டர்சன் மீதான விசாரணை ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

