BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday, 15 July 2014

லிங்குசாமி மீது குணச்சித்திர நடிகர் திடீர் பாய்ச்சல்

மிளகா, நாளை, முத்துக்கு முத்தாக படங்களில் நடித்திருப்பவர் நட்ராஜ் என்கிற நட்டி. இவர்  ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுகிறார். தற்போது மனோபாலா தயாரித்து லிங்குசாமி வெளியிடும் சதுரங்க வேட்டை படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இப்படம் இயக்குனர்கள், நடிகர்களுக்கு திரையிடப்பட்டது. பிறகு அவர்கள் பேட்டி அளித்தனர். இதில் குணச்சித்திர நடிகரான இளவரசு பேசியதாவது: நட்ராஜை பொறுத்தவரை இந்தி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து அழகு தேவதைகள் தீபிகா படுகோன், கேத்ரினா கைப் போன்றவர்களை இப்படி நில், அப்படி நில் என்று வேலை வாங்கிக்கொண்டிருக்கிறார்.

தேவதைகளை வேலை வாங்கிக்கொண்டி ருக்கும் நீ நடிப்பது ஏன்? என்று நட்ராஜிடம் கேட்டேன் அதற்கு அவர், எனது லட்சியம் நடிப்பது. அதனால் ஒளிப்பதிவில் பிஸியாக இருந்தாலும் நடிக்கிறேன் என்றார். இப்பட ஹீரோயின் இஷாரா மதுரை, நெல்லை, கோவை, சென்னை என எல்லா வழக்கு மொழியும் பேசும் திறமை படைத்தவர். இப்படத்தில் அவரே டப்பிங் பேசி இருக்கிறார்.

இயக்குனர் வினோத் மாறுபட்ட கோணத்தில் படத்தை இயக்கி இருக்கிறார். லிங்குசாமி, தான் இயக்கும் படத் தில் எனக்கு வாய்ப்பளிப்பதே இல்லை. இவ்வாறு இளவரசு கூறினார். 


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies