போலந்து நாட்டில் அலுவலகத்தில் கிடைத்த லஞ்ச் பிரேக் சமயத்தில் குழந்தை பெற்று அந்த குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசியெறிந்துவிட்டு மீண்டும் அலுவலகத்தில் வந்து சாதாரணமாக வேலை செய்த கொடூர மனம் கொண்ட தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலந்து நாட்டில் உள்ள Ilawa என்ற பகுதியை சேர்ந்த 33 வயது Jolanta Czarnecka என்ற பெண் தனது ஆண்நண்பர்களிடம் நெருக்கமாக பழகியதன் காரணமாக கர்ப்பமானார். அவர் தன்னுடைய கர்ப்பத்தை கலைக்க டாக்டரை அணுகியபோது, கர்ப்பப்பையில் குழந்தை நன்றாக வளர்ந்துவிட்டது என்றும் இனி கலைக்க முடியாது என்றும் கூறிவிட்டார். பின்னர் தான் கர்ப்பமுற்றதை யாருக்கும் தெரியாமல் மறைத்து எப்பொழுதும் போல அலுவலகத்தில் வேலை செய்தார்.
இந்நிலையில் அவருக்கு நேற்று அலுவலக லஞ்ச் பிரேக் சமயத்தில் பிரசவ வலி வந்தது. அவர் யாருக்கும் தெரியாமல் டாய்லெட் அறைக்கு சென்று தானே குழந்தை பெற்று, பின்னர் அந்த குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசியெறிந்துவிட்டு ஒன்றும் தெரியாதவர் போல அலுவலகத்திற்கு மீண்டும் வந்து வேலை பார்த்தார். அவருடன் பணிபுரியும் ஊழியர்கள் அவருடைய உடையில் உள்ள ரத்தக்கறை குறித்து கேட்டபோது பொய் சொல்லி சமாளித்ததாகவும் தெரிகிறது.
இரண்டு நாட்கள் கழித்து குப்பைத்தொட்டியில் இறந்த குழந்தை ஒன்று இருந்ததை அலுவலக ஊழியர் ஒருவர் கண்டுபிடித்தார். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் Jolanta Czarneckaதான் குழந்தை பெற்று குப்பைத்தொட்டியில் வீசியது தெரியவந்தது. பிறந்த பச்சிளங்குழந்தையை கொலை செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. Jolanta Czarnecka அவர்களும் தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவருக்கு ஐந்து வருட சிறைத்தண்டனை கொடுத்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
போலந்து நாட்டில் உள்ள Ilawa என்ற பகுதியை சேர்ந்த 33 வயது Jolanta Czarnecka என்ற பெண் தனது ஆண்நண்பர்களிடம் நெருக்கமாக பழகியதன் காரணமாக கர்ப்பமானார். அவர் தன்னுடைய கர்ப்பத்தை கலைக்க டாக்டரை அணுகியபோது, கர்ப்பப்பையில் குழந்தை நன்றாக வளர்ந்துவிட்டது என்றும் இனி கலைக்க முடியாது என்றும் கூறிவிட்டார். பின்னர் தான் கர்ப்பமுற்றதை யாருக்கும் தெரியாமல் மறைத்து எப்பொழுதும் போல அலுவலகத்தில் வேலை செய்தார்.இந்நிலையில் அவருக்கு நேற்று அலுவலக லஞ்ச் பிரேக் சமயத்தில் பிரசவ வலி வந்தது. அவர் யாருக்கும் தெரியாமல் டாய்லெட் அறைக்கு சென்று தானே குழந்தை பெற்று, பின்னர் அந்த குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசியெறிந்துவிட்டு ஒன்றும் தெரியாதவர் போல அலுவலகத்திற்கு மீண்டும் வந்து வேலை பார்த்தார். அவருடன் பணிபுரியும் ஊழியர்கள் அவருடைய உடையில் உள்ள ரத்தக்கறை குறித்து கேட்டபோது பொய் சொல்லி சமாளித்ததாகவும் தெரிகிறது.