BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday, 14 July 2014

இளமையாக மாற அஜீத்துக்கு கெடு : தல தலை கருப்பாகிறது

இளமையான தோற்றத்துக்கு மாற அஜீத்துக்கு ஒரு வாரம் அவகாசம் தந்திருக்கிறார் கவுதம் மேனன். பெப்பர் சால்ட் என்ற கறுப்பு வெள்ளை தலைமுடியுடன் வீரம், மங்காத்தா படங்களில் நடித்த அஜீத் அடுத்து கவுதம் மேனன் இயக்கும் படத்திலும் அதேதோற்றத்தில் நடிக்கிறார். இப்படத்தில் அஜீத் இரட்டை வேடம் ஏற்பதால் இளமை ததும்பும் வேடத்திலும் நடிக்கிறார். ஏற்கனவே பெப்பர்சால்ட் தோற்றத்துடன் கூடிய காட்சிகள் பெரும்பகுதி படமாகிவிட்டது. அடுத்து திரிஷாவுடன் நடிக்கும் காட்சிகளுக்காக இளமை ததும்பும் நாயகனாக மாறுகிறார் அஜீத்.

இதற்காக அவருக்கு இயக்குனர் ஒரு வாரம் அவகாசம் கொடுத்திருக்கிறார். அதற்குள் முகத்தை சவரம் செய்து, நரைத்த முடிக்கு கருப்பு டை அடித்து பளபள தோற்றத்துக்கு மாறிவருகிறார் அஜீத். இளமையான தோற்றத்தில் அஜீத்தை பார்த்து வருடக்கணக்கில் ஆகிவிட்ட ரசிகர்களுக்கு இந்த தோற்றம் விருந்தாக இருக்கும் என்று பட குழுவினர் தெரிவிக்கின்றனர்.  


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies