BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday, 21 July 2014

மகளை கருணை கொலை செய்ய கோரி முதல்வர் தனி பிரிவில் தாய் மனு

முதல்வர் தனி பிரிவிற்கு மதுரையை சேர்ந்த அபிராமி சுந்தரி அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:என்னுடைய கணவர் செந்தில் குமார் கடந்த  2002ம் ஆண்டு கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். என்னுடைய இரண்டு மகள்கள் நிலா (15), ரம்யா(14) ஆகியோரை கூலி  வேலைக்கு சென்று காப்பாற்றி வந்தேன். என்னுடைய மகள் ரம்யா மன வளர்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவளை பார்த்து கொள்ள அடிக்கடி விடுப்பு  எடுப்பேன். மற்றவர்களுடைய உதவி இல்லாமல் எந்த வேலையும் அவளால் செய்ய முடியாது. இந்த நிலையில் அடிக்கடி விடுப்பு எடுப்பதால் என்னை வேலையை  விட்டு நிறுத்திவிட்டனர். எனவே மகளை என்னால் பார்த்து கொள்ள முடியவில்லை. நான் பிஏ படித்துள்ளேன். குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு அரசு  வேலையை வழங்கினால் எப்படியாவது மகளை பார்த்து கொள்வேன். இல்லையென்றால் என்னுடைய மகள் ரம்யாவை கருணை கொலை செய்ய அனுமதி  வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது 


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies