என் மகள் படிப்பில்தான் கவனம் செலுத்துகிறாள். அவளை தற்போது நடிக்க வைக்கும் எண்ணமில்லை என்று நடிகை ஸ்ரீதேவி கூறினார். பாலிவுட்டில் செட்டிலான ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். இவர், இப்ப நடிக்கப் போறார்.. அப்ப நடிக்கப் போறார்.. என்று அடிக்கடி தகவல் வெளியாகி வருகிறது. இதனால் பொங்கி எழுந்துள்ளார் ஸ்ரீதேவி. இதுகுறித்து அவர் கூறியதாவது: சினிமாவில் ஜான்வி அறிமுகமாகப் போகிறார் என்று ஏன்தான் பேசிக் கொண்டே இருக்கிறார்களோ என்று தெரியவில்லை. தற்போது அவள் படிப்பில்தான் முழு கவனம் செலுத்துகிறாள். அவளுடைய அம்மாவான நான் சினிமாவில் இருப்பதால் இப்படி எழுதுகிறார்களோ என்னவோ?
சமீபத்தில் நடந்த எல்லா நிகழ்ச்சிகளுக்கும் மகளை அழைத்து வருகிறீர்களே என்று கேட்கிறார்கள். 15 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் நான் சினிமாவில் நடிக்க வந்துள்ளேன். என்னுடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அவளுக்கு ஆசை இருக்காதா என்ன? அதற்காக நான் அவளை சினிமாவில் அறிமுகப்படுத்த முயற்சி செய்கிறேன் என்று அர்த்தமா? நான் அவளை சினிமாவில் அறிமுகப்படுத்த நினைத்தால், இப்படி எல்லாம் நிகழ்ச்சிகளுக்கு அழைத்துவர தேவையே இல்லை. வீட்டிலேயே அவளை வைத்திருந்து சினிமாவில் அறிமுகப்படுத்துவேன்.