BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday, 26 July 2014

ஒரே இரவில் ரத்த நிறத்தில் மாறிய நதியின் தண்ணீர். சீனாவில் பெரும் பரபரப்பு,.

சீனாவில் உள்ள  southeastern Zhejiang province என்ற பகுதியை சேர்ந்த Wenzhou  என்ற நகரில் ஓடும் நதியில் உள்ள தண்ணீர் முழுவதும் திடீரென சிகப்பு நிறமாக மாறிவிட்டதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


சீனாவில் உள்ள Wenzhou என்ற நகரில் உள்ள நதியில் எப்பொழுது வற்றாமல் தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்கும். இந்த பகுதியினர் குடிப்பது முதல் மற்ற அனைத்து உபயோகத்திற்கும் இந்த ஆற்றின் தண்ணீரைத்தான் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இந்த நதியில் ஓடும் தண்ணீர் ஒரே நாள் இரவில் திடீரென ரத்தக்கலரில் செக்கச செவேலென மாறிவிட்டது. முந்திய நாள் இரவில் நார்மலான நிறத்தில் இருந்த தண்ணீர் ஒரே நாள் இரவில் எப்படி நிறம் மாறியது என்று புரியாமல் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இந்த பகுதியை சேர்ந்த ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, அதிகாலை நான்கு மணியளவில் தண்ணீரின் கலர் நார்மலாகத்தான் இருந்தது என்றும் காலை ஆறுமணியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நிறம் மாறி சில நிமிடங்களில் ஆற்றின் தண்ணீர் முழுவதும் ரத்த நிறத்தில் மாறிவிட்டது என்று தெரிவித்தார். இதற்கு முன்பு இதுமாதிரியான நிகழ்ச்சி சீனாவில் உள்ள எந்த நதியிலும் ஏற்பட்டது இல்லை என்றும், இது ஏதோ சாத்தானின் சூழ்ச்சி என்றும் அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த Wenzhou Environmental Protection Bureau அதிகாரிகள் இந்த ஆற்றின் தண்ணீரை எடுத்து ஆய்வுக்கூடத்தில் சோதனை செய்து வருகின்றனர். இந்த ஆற்றின் கரையில் ஏராளமான தொழிற்சாலைகள் அதன் கழிவுகளை கலந்து வருகின்றன என்றும், ஏதோ ஒரு கெமிக்கல் ரியாக்சன் இந்த நிறம் மாறுதலுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. 


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies