BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday, 30 July 2014

சென்னையில் பாலிவுட் நடிகருடன் விஜய் மோதல்

‘துப்பாக்கி’ படத்திற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் இணைந்திருக்கும் புதிய படம் ‘கத்தி’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். இவர்களுடன் சதீஷ், பிரபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நீல் முகேஷும், விஜய்யும் மோதும் காட்சிகள் தற்போது சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து ஒரு பாடல் காட்சியை படமாக்க படக்குழுவினர் வெளிநாடு செல்லவுள்ளனர். மேலும், ஒரு பாடலை அடுத்த மாதம் வடஇந்தியாவில் படமாக்கவுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாத இறுதிக்குள் முடித்துவிட்டு, இறுதிக்கட்ட பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.

‘கத்தி’ படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனமும், லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. வரும் தீபாவளிக்கு படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies