ஜெயம்ரவி ‘தனி ஒருவன்’ படத்தில் நயன்தாராவுடன் நடிக்கிறார். ‘ரோமியோ
ஜுலியட்’ படத்தில் ஹன்சிகாவுடன் நடிக்கிறார். மூன்றாவதாக சுராஜ் இயக்கும்
பெயரிடப்படாத படம் ஒன்றிலும் நடிக்கிறார். இதில் இரு கதாநாயகிகள் உள்ளனர்.
ஏற்கனவே அஞ்சலி தேர்வாகியுள்ளார். ஜெயம்ரவி, அஞ்சலி நடித்த காட்சிகள்
சமீபத்தில் படமாக்கப்பட்டன.
இன்னொரு நாயகியாக நடிக்க திரிஷாவை பரிசீலித்தனர். அவர் பூலோகம் படத்தில் ஜெயம்ரவியுடன் நடித்து விட்டதால் இதுவரை நடிக்காத கதாநாயகியை தேடினர். காஜல் அகர்வால் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்தனர். இதையடுத்து அவரை அணுகி கால்ஷீட் கேட்டனர். இந்த படத்தில் நடிக்க காஜல் அகர்வால் ரூ.1½ கோடி சம்பளம் வேண்டும் என்றாராம். இதை கேட்டதும் படக்குழுவினருக்கு தூக்கி வாரி போட்டது. சம்பளத்தை குறைக்கும்படி அவர்கள் நிர்ப்பந்தித்தும் அவர் ஒப்புக் கொள்ளவில்லையாம். இவ்வளவு சம்பளம் கொடுப்பது சம்பளத்தின் மொத்த பட்ஜெட்டுக்கு சரிவராது ஒன்று திரும்பி விட்டார்கள்.
இதுகுறித்து படக்குழுவினர் கூறும்போது, ‘‘காஜல் அகர்வால் தெலுங்கு, தமிழ் படங்களில் தனியாக திறமை காட்டி சாதித்து விடவில்லை. சிறந்த நடிகை எனவும் பெயர் வாங்கவில்லை. அவர் ரூ.1½ கோடி கேட்டது தகுதிக்கு மீறியது என்றனர்.