தமிழ் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் தல-55 தான். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இரவு நேரங்களில் எடுத்து வந்தனர். அஜித்தின் யங் லுக்கிற்காக சில நாட்கள் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் இன்று தொடங்கியுள்ளது. இதை படத்தின் ஒளிப்பதிவாளர் டான் தன் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.இதில் ‘மீண்டும் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது, அஜித் அதே உற்சாகத்தோடு படப்பிடிப்பில் இருக்கிறார், கொஞ்சம் கூட சோர்வடையவில்லை’ என டுவிட் செய்துள்ளார்.

