காடு சார்ந்த மலைச் சரிவு பகுதியில் கற்கால மனிதர்கள் வாழ்ந்த கதையாக படமாகிறது ஆறாம் வேற்றுமை. இதுபற்றி பட இயக்குனர் ஹரி கிருஷ்ணா, கூறியதா வது: மலைச் சரிவில் வாழும் கற்கால மனிதர்கள் வாழ்க்கை, இயற்கையோடு ஒன்றிச் செல்கிறது. ஒரு சமயம் அந்த கூட்டத்தை சேர்ந்த ஒருவனுக்கு மனதில் ஒரு கேள்வி பிறக்கிறது. அது அந்த இனத்தின் அடித்தளத்தையே ஆட்டி வைப்பதாக அமைகிறது. அந்த கேள்வி என்ன? கற்கால மனிதர்களின் எழுச்சி என்ன என்பதை யதார்த்தமாக சொல்கிறது கதை. அஜய் ஹீரோ. கோபிகா, உமாஸ்ரீ ஹீரோயின்கள்.அழகு, ராஜேந்திரபிரசாத், உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு கே.அறிவழகன். இசை கணேஷ் ராகவேந்திரா. தயாரிப்பு எஸ்.சக்திவேல். படத்தில் நடிக்கும் அனைத்து நட்சத்திரங்களுக்கும் கற்கால மனிதர்கள் அணிந்த உடைகளைப்போல் காஸ்டியூம் வடிவமைக்கப்பட்டது. உடல் முழுவதும் விலங்குகளின் தோற்றம்போல் மேக்அப் போடப்பட்டது. இதற்கே பல மணிநேரம் ஆனது. சத்தியமங்கலம் அருகே மலைப்பகுதியில் அக்கூட்டத்தினர் வாழ்ந்த குகைள் போன்ற இருப்பிடங்கள் அமைக்கப்பட்டன.
