BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday, 1 August 2014

பஸ் மீது ரெயில் மோதியதில் 10 பேர் பலி; 50 பேர் காயம்


வங்காளதேசத்தில் பஸ் மீது ரெயில் மோதியதில் 10 பேர் பலியாகினர். 50 பேர் காயம் அடைந்தனர்.

ஜெனய்டாக் மாவட்டத்தில் திருமண வீட்டாளர்களை ஏற்றிவந்த பஸ் மீது ரெயில் ஒன்று பலமாக மோதியது. அதிகாலை 3.45 மணி அளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆள் இல்லாத ரெயில்வே கேட்டை பஸ் கடந்த போது அவ்வழியாக வந்த சிமன்தா எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது. பஸ் மீது ரெயில் மோதிய வேகத்தில் பஸ்சை சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவிற்கு இழுத்து சென்றுள்ளது. இந்த விபத்தில் 10 பேர் பலியாகினர். 50 பேர் காயம் அடைந்துள்ளனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies