BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday, 1 August 2014

பாலா படத்தில் வில்லனாக அறிமுகமாகும் சுரேஷ்

‘பரதேசி’ படத்திற்குப் பிறகு பாலா இயக்கும் புதிய படம் ‘தாரை தப்பட்டை’. இப்படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக வரலட்சுமி நடிக்கிறார். இவர்களுடன் ஜி.எம்.குமார். பிரகதி குருபிரசாத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். செழியன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். கதை, திரைக்கதை எழுதி பாலா இயக்குகிறார். பாலாவின் ‘நான் கடவுள்’ படத்திற்கு வசனம் எழுதிய ஜெயமோகன் இப்படத்திற்கும் வசனம் எழுதியிருக்கிறார்.

இப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு சென்னையில் சமீபத்தில் தொடங்கியது. பாலா தன் படத்தில் வில்லன்களை தேர்வு செய்வதில் சாமர்த்தியமானவர். ‘நான் கடவுள்’ படத்தில் ராஜேந்திரனையும், ‘அவன் இவன்’ படத்தில் ஆர்.கே.வையும் தேர்வு செய்து வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். அதன்படி தற்போது இயக்கி வரும் ‘தாரை தப்பட்டை’ படத்திலும் சுரேசை வில்லன் வேடத்திற்கு தேர்வு செய்துள்ளார் என்று தகவல் வந்துள்ளது.

ஆர்.கே.சுரேஷ் என்னும் இவர் பல படங்களை தயாரித்து வரும் ஸ்டுடியோ 9 கம்பெனியின் நிறுவன தலைவர் ஆவார்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies