பிரான்ஸ் தலைநகரம் பாரீசில் உள்ள போலீஸ் தலைமை அலுவலகத்தில் இருந்த 24.5
கோடி ரூபாய் மதிப்புள்ள 50 கிலோ ''கொகைன்'' மாயமானதை அறிந்து அதிகாரிகள்
அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பாரீசின் பல பகுதியில் இருந்தும் கடந்த ஜூலை மாதம் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 50 கிலோ கொகைன் போதைப்பொருள் தலைமை அலுவலகத்தில் உள்ள ஒரு பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டிருந்தது.
அந்த போதைப்பொருள் நேற்று மாயமானது. இதுகுறித்து தேசிய போலீஸ் உள்விவகார பிரிவு அதிகாரிகள், பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வருகின்றனர்.
விசாரணையில் சட்டத்தை மீறயது தெரியவந்தால் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் அதிகாரி தெரிவித்தார்.