கிளாஸ்கோ: காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இன்று நடைபெற்ற
மகளிருக்கான குத்து சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை வெண்கல பதக்கம்
வென்றார்.
காமன்வெல்த் போட்டிகளில் இன்று பெண்களுக்கான 48-51கிலோ பிரிவு,
குத்துச்சண்டை அரையிறுதி போட்டி நடைபெற்றது.
இதில் இந்தியாவின் பிங்கி ராணி
ஜன்க்ரா மற்றும் வடக்கு அயர்லாந்தின் வால்ஸ் ஆகியோர் மோதினர்.
பரபரப்பான
இந்த ஆட்டத்தில் பிங்கி ராணி தோல்வியடைந்தார்.
மூன்றாம் இடம் பிடித்ததற்காக அவருக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.

