நடிகர் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படம் தமிழகம் முழுவதும்
ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தில் இடம் பெற்றுள்ள இந்து மத பள்ளி
பற்றி அவதூறு வசனம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு இந்து
அமைப்புகள் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில் நெல்லையில் தனுஷ் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டரை முற்றுகையிட போவதாக இந்து முன்னணியினர் அறிவித்தனர். இதனால் இன்று அந்த தியேட்டர் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்து முன்னணி மாவட்ட தலைவர் பாலாஜி கிருஷ்ணசாமி தலைமையில் ஏராளமானோர் தியேட்டரை முற்றுகையிடுவதற்காக திரண்டு வந்தனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் மாவட்ட தலைவர் பாலாஜி கிருஷ்ணசாமி, நிர்வாகிகள் குற்றாலநாதன், வெட்டும்பெருமாள், வேல் ஆறுமுகம் உள்பட 32 பேரை கைது செய்தனர்.