BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday, 1 August 2014

ஆசிரியையிடம் ரூ.3 லட்சம் லஞ்சம்: தலைமையாசிரியர் கைது

ஆந்திர மாநிலம், செகந்திராபாத் பகுதியில் உள்ள ரெயில்வே பள்ளியில் கடந்த 35 ஆண்டுகள் ஆசிரியையாக பணியாற்றி வந்த ஒருவர் அடுத்த ஆண்டு பணி ஓய்வு பெற உள்ளார்.

இந்நிலையில், பணியில் சேர்ந்தபோது அந்த ஆசிரியை அளித்திருந்த சாதிச் சான்றிதழில் பிரச்சனை உள்ளதாகவும், விஜிலென்ஸ் அதிகாரிகள் இதைக் கண்டுபிடித்து விட்டால், ஓய்வுக் காலப் பலன்களை அந்த ஆசிரியை பெற முடியாது என்றும் மிரட்டிய ரெயில்வே பள்ளியின் தலைமையாசிரியர் நாகேஷ்வர்ராவ் மற்றும் ரெயில்வே பள்ளி அலுவலக கண்காணிப்பாளர் நரசிம்மலு ஆகியோர், இவ்விஷயத்தை சரி செய்ய 3 லட்சம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இவர்களின் மிரட்டலை சி.பி.ஐ. போலீசாருக்கு ஆசிரியை தெரிவிக்க, கையும் களவுமாக அவர்களை பிடிக்க வலை விரிக்கப்பட்டது.

இதனையடுத்து, ஆசிரியையின் வீட்டுக்கு இருவரும் வரவழைக்கப்பட்டனர். ரொக்கப்பணம் 1 லட்சம் ரூபாய் மற்றும் 2 லட்சம் ரூபாய்க்கான காசோலை ஆகியவற்றை தலைமையாசிரியர் நாகேஷ்வர்ராவ் மற்றும் அலுவலக கண்காணிப்பாளர் நரசிம்மலு ஆகியோர் பெற்றுக் கொண்டபோது, மறைந்திருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் பாய்ந்துச் சென்று அவர்களை கைது செய்தனர்.

அவர்கள் இருவரும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies