மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான
நிலையத்தில் வந்திறங்கிய பயணிகளின் உடைமைகளை விமான நிலைய சுங்கத் துறை
அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது, சிங்கப்பூரில் இருந்து வந்த ரமேஷ் குமார், மற்றும் பாங்காக்கில் இருந்து வந்த ஜகதிஷ், ஹரிஷ் குமார், கிஷோர், ஜெயராம் ஆகியோரின் நடவடிக்கையில் சந்தேகப்பட்டு, அவர்களை தனியாக அழைத்துச் சென்று தீவிரமாக சோதனையிட்ட போது ஐந்து பேரும் தங்களது மலக்குடலில் மறைத்து சுமார் 52 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சென்னைக்கு கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து, அவர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டதாகவும், வயிற்றில் இருக்கும் தங்கத்தை வெளியேற்ற சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் நேற்று தெரிவித்தனர்.