BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday, 2 August 2014

திருநின்றவூரில் மின்சார ரெயிலில் அடிபட்டு கல்லூரி மாணவர் பலி

திருவள்ளூர் மணவாள நகரை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் விக்னேஸ்வரன் (18).

இவர் வேப்பம்பட்டில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

விக்னேஸ்வரன் நேற்று மாலை புத்தகம் வாங்க வேப்பம்பட்டில் இருந்து மின்சார ரெயில் மூலம் ஆவடி சென்றார்.

பின்னர் புத்தகம் வாங்கி விட்டு சென்னை– திருத்தணி மின்சார ரெயிலில் வீடு திரும்பினார். ரெயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் வாசலில் தொங்கியவாறு பயணம் செய்தார்.

திருநின்றவூர்– நெம்மிலிசேரி இடையே ரெயில் சென்று கொண்டு இருந்த போது வெளியே இருந்த மின் கம்பம் மீது விக்னேஸ்வரின் தலை மோதியது.

இதில் மண்டை உடைந்து விக்னேஸ்வரன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவல் அறிந்ததும் திருவள்ளூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விக்னேஸ்வரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies