பெரும்பகுதி படப்பிடிப்பை மும்பையில் நடத்தி உள்ளனர். இடைவேளைக்கு பிறகு படத்தின் காட்சிகள் நீளமாக இருப்பதாக விமர்சனங்கள் கிளம்பின. சில காட்சிகளை குறைக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டன. இதையடுத்து அஞ்சான் படத்தில் 6 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டு நீளம் குறைக்கப்பட்டது.
இது குறித்து யு.டி.வி படநிறுவன நிர்வாகி தனஞ்செயன் கூறும் போது:–
அஞ்சான் படத்தில் இடைவேளைக்கு பிறகு காட்சிகள் நீளமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். எனவே அதை குறைக்க முடிவு செய்தோம். தற்போது 6 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டு உள்ளன. பிரம்மானந்தம் காமெடி காட்சியொன்று படத்தில் உள்ளது. அது கதையோடு சார்ந்து இல்லாமல் இருந்ததால் அக்காமெடி நீக்கப்பட்டு உள்ளது. ஆனால் தெலுங்கு படத்தில் இந்த காமெடி இருக்கும் என்றார்.

