BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday, 18 August 2014

படப்பிடிப்பில் நெருக்கம்: கன்னட நடிகையுடன் ஆர்யா காதல்?

ஆர்யாவுக்கும், கன்னட நடிகை தீபா சன்னிதிக்கும் காதல் மலர்ந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் விஷ்ணுவர்த்தன் இயக்கும் ‘யட்சன்’ படத்தில் ஜோடியாக நடிக்கிறார்கள். படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக கிசுகிசுக்கப்படுகிறது. அடிக்கடி ரகசியமாகவும் சந்தித்து காதல் வளர்க்கிறார்களாம்.

தீபா சன்னிதி கன்னடத்தில் முன்னணி நாயகியாக இருக்கிறார். ‘யட்சன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். சித்தார்த்துடன் நடிக்கவும் புதுப்படமொன்றில் ஒப்பந்த மாகியுள்ளார். ஆர்யாவுடன் ஏற்கனவே பல நடிகைகள் இணைத்து பேசப்பட்டனர்.

‘ராஜா ராணி’ படத்தில் நடித்த நயன்தாராவுடன் காதல் என்றனர். அவருக்கு வீட்டில் அழைத்து விசேஷ விருந்து கொடுத்தார். ‘நான் கடவுள்’ படத்தில் நடித்த பூஜாவுடனும் சேர்த்து பேசப்பட்டார். இப்போது கன்னட நடிகை தீபா சன்னிதியுடன் இணைத்து பேசப்படுகிறார்.

இது குறித்து தீபா சன்னிதியிடம் கேட்ட போது வழக்கமாக எல்லா நடிகைகளும் மறுப்பது போல் மறுத்தார். அவர் கூறியதாவது:–

ஆர்யாவும், நானும் ‘யட்சன்’ படத்தில் நடிக்கிறோம். அவருடன் நான்கு ஐந்து நாட்கள்தான் சேர்ந்து நடித்துள்ளேன். அதற்குள் காதல் என்று வதந்தி பரப்பி உள்ளனர். இதை கேட்டதும் எனக்கு சிரிப்புதான் வந்தது. எங்களுக்குள் காதல் எதுவும் இல்லை. நான் தற்போது பெங்களூரில் இருக்கிறேன்.

‘யட்சன்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு செப்டம்பரில் நடக்கிறது. அப்போது மீண்டும் அந்த படத்தில் நடிப்பதற்காக வருவேன். சித்தார்த்துடனும் தமிழ் படத்தில் நடிக்கிறேன். தமிழை புரிந்து கொள்கிறேன். ஆனால் பேசுவதில் கஷ்டம் உள்ளது. விரைவில் தமிழ் வசனம் பேச கற்றுக் கொள்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies