இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது
டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள்
தொடரில் விளையாட உள்ளது.
இத்தொடருக்கான இந்திய அணி வரும் 7-ம் தேதி தேர்வு செய்யப்பட உள்ளது.
ஒருநாள் போட்டிகள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கான அணியை தேர்வு செய்வதற்காக சந்தீப் பாட்டீல் தலைமையிலான தேர்வுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 7-ம் தேதி பிற்பகல் நடைபெறும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதம் நடைபெற உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை கவனத்தில் கொண்டு இந்த போட்டிகளுக்கு வீரர்களை தேர்வு செய்ய தேர்வுக்குழுவினர் ஆயத்தமாகி வருகின்றனர்.
ஜூன் மாதம் வங்காளதேச அணியுடன் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியபோது கேப்டன் டோனி உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, ரெய்னா தலைமையிலான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதேபோல் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என தெரிகிறது.
தேர்வுக் குழு கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக 5-ம் தேதி பிசிசிஐ மார்க்கெட்டிங் கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது. அடுத்து இந்தியா விளையாடக் கூடிய சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளுக்கான டைட்டில் ஸ்பான்சரை முடிவு செய்வதற்கான பொது டெண்டர் நடைமுறை இறுதி செய்யப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.