ரஜினி படங்களில் ‘பஞ்ச்’ வசனங்கள் இடம்பெறுவது வழக்கமாக இருந்து வந்தது.
இந்த வசனங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருக்கும்.
‘16 வயதினிலே’ படத்தில் இடம்பெற்ற ‘இது எப்படி இருக்கு’, ‘பாட்ஷா’ படத்தில் இடம் பெற்ற ‘நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி’, ‘அருணாசலம்’ படத்தில் வரும் ‘ஆண்டவன் சொல்றான் அருணாசலம் செய்றான்’. ‘படையப்பா’ படத்தில் இடம் பெற்ற ‘என் வழி தனி வழி’ என பல படங்களில் ரஜினி பேசிய ‘பஞ்ச்’ வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் கைதட்டலை பெற்றன.
ஆனால் சமீபத்திய படங்களில் ‘பஞ்ச்’ வசனங்கள் இடம்பெறவில்லை. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இந்த நிலையில் ‘லிங்கா’ படத்தில் ரஜினிக்கு ‘பஞ்ச்’ வசனங்கள் கொடுக்கப்பட்டு உள்ளன.
இப்படத்தில் ரஜினி இரு வேடங்களில் வருகிறார். அதில் ஒரு கேரக்டர் அரசமரம் கரையில் வந்த ஒருவன் மக்களுக்காக அணை ஒன்றை கட்ட பாடுபடுவதுபோல் சித்தரிக்கப்படுகிறது. அந்த கேரக்டருக்குதான் ‘பஞ்ச்’ வசனங்கள் கொடுக்கப்பட்டு உள்ளன.
‘எனக்கு எந்த சாதிக்காரரும் வேண்டாம். இந்தியனா இருக்கிறவன் மட்டும் என்கூட வாங்க’ என்பது உள்பட பல அரசியல் ‘பஞ்ச்’ வசனங்கள் படத்தில் இடம் பெற்று உள்ளதாம்.
‘லிங்கா’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கர்நாடகா மாநிலத்தில் ‘ஷிமோகா’ பகுதியில் உள்ள ஜோக் நீர்வீழ்ச்சியில் நடக்கிறது. நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், திரைப்பட தொழிலாளர்கள் என 3 ஆயிரம் பேருடன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ரஜினி, சோனாக்சி சின்ஹா நடிக்கும் காட்சிகளை அங்கு படமாக்குகின்றனர்.