ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம்பிரபு நடிக்கும் புதிய படத்தின்
படப்பிடிப்பு இன்று கொச்சியில் தொடங்கியுள்ளது. காதல் படமாக உருவாகும்
இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை கீர்த்தி
சுரேஷ் நடிக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தில் வரும் பிளாஷ்பேக் காட்சியில் நடிக்க இன்னொரு நடிகையையும் தேர்வு செய்துள்ளனர். அதன்படி, பெங்களூரில் மாடல் அழகியான காவ்யா ஷெட்டியை இன்னொரு நாயகியாக தேர்வு செய்துள்ளனர்.
இதுகுறித்து காவ்யா ஷெட்டி கூறும்போது, விக்ரம் பிரபு நடிக்கும் படத்தில் காலேஜ் பெண்ணாக நடிக்கிறேன். படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் மட்டும் நடிக்கிறேன். நான் நடிக்கும் காட்சிகளை கொச்சியில் தொடங்கியுள்ளோம் என்று கூறியுள்ளார். இப்படத்தில் விஜய்யின் அபிமான இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ராதிகா சரத்குமாரின் ராடன் நிறுவனமும், லிஸ்டின் ஸ்டீபனின் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.