BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday, 16 August 2014

படப்பிடிப்பில் திருடு போன அனுஷ்கா அணிந்த நகைகள் சென்னையில் பதுக்கல்?

அனுஷ்கா ‘ருத்ரமா தேவி’ என்ற சரித்திர படத்தில் ராணி வேடத்தில் நடிக்கிறார். தமிழ் தெலுங்கில் இப்படம் தயாராகிறது. இதில் அனுஷ்கா நிறைய நகைகள் அணிந்து நடிக்கிறார். இதற்காக சென்னையில் உள்ள நகைக்கடை ஒன்றில் இருந்து பல கோடிக்கு தங்க நகைகள் வாங்கப்பட்டன. தலையில் அணியும் கிரீடத்தையும் தங்கத்தில் செய்து இருந்தனர்.

ஐதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில் அனுஷ்கா இந்த நகைகளை அணிந்து நடித்தார். படப்பிடிப்பு முடிந்ததும் நகைகளை கழற்றி பெட்டியில் வைத்து பூட்டி வைத்தனர். திடீரென்று அந்த நகைகள் மாயமானது. மர்ம நபர் திருடிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

மொத்தம் 2 கிலோ தங்கமும், 1 கிலோ வெள்ளியும் திருடப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.2 கோடியே 25 லட்சம் ஆகும். இதுகுறித்து ஐதராபாத் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சென்னையில் இருந்து விமானத்தில் அந்த நகைகள், ஐதராபாத் கொண்டு செல்லப்பட்டது. எனவே ஐதராபாத் விமான நிலையத்தில் உள்ள சி.சி.டி. கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். நகைகளை கொண்டு வந்தவர் பின்னால் சந்தேகப்படும்படி யாரும் வந்தார்களா? என்று கேமராவில் பார்த்தார்கள்.

பின்னர் ஐதராபாத் போலீசார் நேற்று சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்திலும் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீஸ் உதவியுடன் சி.சி.டி. கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். நகைப்பெட்டி எடுத்துச் செல்லப்பட்ட நாளில் பதிவான காட்சிகளையும் திருட்டு போன அன்று பதிவான காட்சிகளையும் பார்த்தார்கள். சந்தேகப்படும்படியான வீடியோ ஆதாரங்களை சி.டி.யில் பதிவு செய்து எடுத்துச் சென்றனர்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies