‘வெண்ணிலா கபடி குழு’, ‘நான் மகான் அல்ல’, ‘பாண்டிய நாடு’ உள்ளிட்ட
வெற்றிப்படங்களை இயக்கிய சுசீந்திரன், தற்போது ‘ஜீவா’ என்ற படத்தை இயக்கி
வருகிறார். இப்படத்தின் நாயகனாக விஷ்ணு விஷால் நடிக்கிறார். கதாநாயகியாக
ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். மேலும், சூரி, சுரபி உள்ளிட்டோரும்
நடித்துள்ளனர். டி.இமான் இசையமைக்க, மதி ஒளிப்பதிவை கவனிக்கிறார்.
இப்படத்தை ஆர்யாவின் ஷோ பீப்பிள் நிறுவனம், தி நெக்ஸ்ட் பிக் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில் படத்தை செப்டம்பரில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.
‘வெண்ணிலா கபடி குழு’ படத்திற்கு பிறகு மீண்டும் விஷ்ணு விஷால்-சுசீந்திரன் கூட்டணி ஒன்று சேர்ந்திருக்கும் இப்படத்தின் மீது இப்போதே எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.