மொபைல் போனை யாரும் சார்ஜில் இருக்கும் போது பயன்படுத்தாதீர்கள் என பல விழிப்புணர்வு விளம்பரங்கள் வந்தாலும் யாரும் அதனை கேட்பதாக இல்லை. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒரு இளம்பெண் தூங்கும் போது தனது ஐபோனுக்கு சார்ஜ் போட்டு தனது அருகில் வைத்து தூங்கி உள்ளார். தூக்க கலக்கத்தில் அந்த போனின் மீது படுத்து உறங்கியுள்ளார். போன் சார்ஜில் இருந்ததால் அது அதிக வெப்பம் ஆகியுள்ளது.
இதனால் அவரது மார்பகத்தில் காயமாகியுள்ளது. போன் அதிக வெப்பம் ஆனதே அவரது மார்பகத்தில் காயம் ஏற்பட்டதற்கு காரணம் என தெரிய வந்துள்ளது. அவரது மார்பகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரது குழந்தைக்கு தாய்பால் கொடுக்க முடியாத நிலையில் உள்ளார். இந்த செய்தியை பார்த்து விட்டாவது அனைவரும் சார்ஜில் இருக்கும் மொபைலை பயன்படுத்தாமல் இருக்கலாம்.


