கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில
வாரங்களாக பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள கபினி அணை நிரம்பியது.
கிருஷ்ணராஜசாகர், ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளன.
இதையடுத்து கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் காவிரியில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது.
மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து வினாடிக்கு 42 ஆயிரம் கன அடி தண்ணீர் வரை அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் ‘மளமள’வென உயரத் தொடங்கியது. தினமும் 3 அடி வீதம் நீர்மட்டம் உயர்ந்தது.
இதற்கிடையில் கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் தீவிரம் குறைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்தது. நேற்று காலை நீர்வரத்து 14 ஆயிரத்து 103 கன அடியாக குறைந்தது.
கபினி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று மீண்டும் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் நேற்று முன்தினம் விநாடிக்கு 11 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் திறப்பு நேற்று மாலை முதல் 15 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 8 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த 2 அணைகளில் இருந்தும் விநாடிக்கு 23 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் நாளை முதல் மேட்டூர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் நீர்மட்டமும் அதிகரிக்கும் சூழல் உருவாகி உள்ளது.
மேட்டூர் அணைக்கு இன்று காலை 14 ஆயிரத்து 320 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் 82.42 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் ஆடிப்பெருக்கு விழா விற்காக 6 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் 13 நாட்களுக்கு பிறகு நேற்று காலை முதல் நிபந்தனைகளுடன் பரிசல் இயக்க தர்மபுரி மாவட்ட கலெக்டர் விவேகானந்தன் உத்தரவிட்டார். பரிசலில் 5 பேருக்கு மேல் ஏற்றிச் செல்லக் கூடாது, பரிசலில் செல்பவர்கள் அனைவரும் லைப் ஜாக்கெட் உடை அணிந்து இருக்க வேண்டும், செல்போன், கேமிரா போன்ற உபகரணங்களை எடுத்துச் செல்லக் கூடாது போன்ற நிபந்தனைகளுடன் பரிசல் இயக்கப்பட்டன.
இதையடுத்து நேற்று சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று ஒகேனக்கல் அருவியின் அழகினை ரசித்தனர்.