BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday, 1 August 2014

இதுவரை வெளிவராத சில்க் ஸ்மிதாவின் மர்மங்கள். பிரபல இயக்குனர் அதிர்ச்சி தகவல்.

கடந்த 80களில் தமிழ் சினிமாவை கலக்கிக்கொண்டிருந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு கிட்டத்தட்ட அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் வெளிவந்துவிட்டது. பாலிவுட்டில் சில்க் ஸ்மிதா கேரக்டரில் நடித்த வித்யா பாலனுக்கு தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் அர்விந்த் ஆகாஷ் மற்றும் சனாகான் நடித்து அனில்குமார் இயக்கிய சில்க் ஸ்மிதா கதை பெரும் வெற்றியை பெற்றது. அதேபோல் அந்த படம் கன்னடத்திலும் டப் செய்யப்பட்டது.

தற்போது சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படம் மராத்தியில் தயாராகவுள்ளது. இந்த படத்தை தயாரித்து இயக்கவுள்ள சமீர்கான் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "சில்க் ஸ்மிதாவின் கதை பல மொழிகளில் வந்திருந்தாலும், மராத்தியில் தான் வித்தியாசமாக தயாரிக்க உள்ளதாக கூறியுள்ளார். சில்க் ஸ்மிதாவின் குடும்பத்தினர்களிடம் சிறப்பு அனுமதி பெற்று இதுவரை சில்க் ஸ்மிதா குறித்து வெளிவராத சில திடுக்கிடும் தகவல்கள் அடங்கிய காட்சிகளுடன் இந்த படத்தை இயக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த படத்தில் சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்க முன்னணி நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளதாகவும் சமீர்கான் தெரிவித்துள்ளார். இந்த படம் சில்க் ஸ்மிதா ரசிகர்களுக்கு ஒரு கவர்ச்சி விருந்தாக மட்டுமின்றி திடுக்கிடும் தகவல்கள் நிறைந்த ஒரு த்ரில் படமாகவும் இருக்கும் என அவர் மேலும் கூறினார்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies