BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday, 1 August 2014

மேரிகோம் ரீமேக் உரிமையை வாங்கும் சமந்தா. தயாரிப்பாளராக மாற அதிரடி முடிவு

பாலிவுட்டில் ப்ரியங்கா சோப்ரா நடித்த 'மேரிகோம்' திரைப்படத்தின் டிரைலரை விமானத்திற்காக காத்திருக்கும் நேரத்தில் யூடியூபில் பார்த்துள்ளார் சமந்தா. அவருடைய நடிப்பை பார்த்து அசந்து போய்விட்டாராம். எத்தனை நாள்தான் காதலனின் கையை பிடித்துக்கொண்டே நடிப்பது. இதுபோன்று ஒரு ஆக்சன் படத்தில் நடிக்கவேண்டும் என்று ஆசைவந்துவிட்டதாம் சமந்தாவுக்கு.

தனக்கு தெரிந்த ஒருசில தயாரிப்பாளர்களிடம் 'மேரிகோம்' படத்தின் தமிழ் உரிமையை வாங்குங்கள். நான் நடித்து தருகிறேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் தயாரிப்பாளர்கள் நீங்க அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டீங்க. பேசாமல் கவர்ச்சி வேடங்களில் மட்டும் நடித்து காசு பார்க்க பாருங்கள் என்று அட்வைஸ் செய்துள்ளனர்.

ஆனாலும் சமந்தாவுக்கு ப்ரியங்கா சோப்ராவின் கேரக்டர் மனதை பாதித்துக்கொண்டே இருக்கின்றதாம். மேரிகோம் படத்தின் தமிழ் உரிமையை விலைக்கு வாங்க எவ்வளவு பணம் தேவைப்படும் என தனது உதவியாளர் மூலம் விசாரிக்க சொல்லியிருக்கிறார் சமந்தா. அந்த படத்தின் உரிமையை வாங்கி முதன்முதலாக படத்தயாரிப்பில் இறங்க அதிரடியாக முடிவெடுத்துள்ளார் சமந்தா. இதுகுறித்து அறிந்த நட்பு வட்டாரங்கள் 'இதெல்லாம் தேவையில்லாத வேலை' என்று அவரை எச்சரிக்கை செய்து வருகின்றனர். ஆனால் அவர் தன் முடிவில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies