BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday, 25 September 2024

Vijay: `TVK மாநாடு; 33 நிபந்தனைகள்... 17 கட்டாயம்’ - தவெக மாநாட்டுக்கு அனுமதி!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகக் கட்சி தொடங்கி, அதன் கொடி, பாடல் என தொடர் அறிவிப்புகள் மூலம் அரசியல் அரங்கில் பரபரப்புடன் இயங்கி வருகிறார். இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அக்டோபர் 27-ம் தேதி த.வெ.க வின் முதல் அரசியல் மாநாடு நடத்தப்படும் என த.வெ.க தலைவர் விஜய் அறிவித்தார். அதைத் தொடர்ந்து, மாநாட்டுக்கான வேலைகள் சுறுசுறுப்பாக தொடங்கியது. மாநாடு நடத்துவதற்காக இடத் தேர்வு தொடங்கி பல திட்டங்கள் வடிவமைக்கப்பட்டன.

த.வெ.க. தலைவர் விஜய்

இதற்கிடையில், த.வெ.க சார்பில் மாநாடு நடத்தவும், அதற்கான அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டும் விழுப்புரம் மாவட்ட காவல்துறையிடம், அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் 5 நாள்களுக்கு முன்பு கடிதம் கொடுத்தார். அதைத் தொடர்ந்து காவல்துறை 33 நிபந்தனைகளை விதித்தது. ஆனால் அனுமதி கொடுக்கப்படவில்லை எனக் கூறப்பட்டது. இதற்கிடையில், "தி.மு.க, த.வெ.க-வை பார்த்து பயப்படுகிறது" என மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட சிலர் விமரசித்திருந்தனர். இந்த நிலையில்தான் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு, விழுப்புரம் மாவட்ட காவல்துறை அனுமதி வழங்கியிருக்கிறது.

ஏற்கனவே வழங்கப்பட்ட 33 நிபந்தனைகளை மீண்டும் சுட்டிக்காட்டிய காவல்துறை அதில், உரிய வாகன நிறுத்துமிடத்தில்தான் வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டும், மருத்துவ உதவிக்கான ஆம்புலன்ஸ் வசதி, தீயணைப்பு வாகனம் மாநாடு நடக்கும் இடத்தில் இருக்க வேண்டும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. போதுமான கழிவறை வசதி, சுகாதாரமான உணவு போன்றவைகளை உறுதிப்படுத்த வேண்டும்.

விஜய் - ஆனந்த்

விஜய் வரும் வழிகளில் இருபுறமும் தடுப்பு ஏற்படுத்துதல், பேனார்கள், வரவேற்பு வளைவுகளை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் அமைத்தல் வேண்டும் என்பது உள்ளிட்ட 17 நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் இன்று நிர்வாகிகள் கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies