BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday, 30 July 2014

இந்தியில் படம் தயாரிக்கும் ஏ.ஆர்.ரகுமான்

ரோஜா  படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி, தனது முதல் படத்திலேயே தேசிய விருதை வென்று, ஹாலிவுட் வரை சென்று சினிமாவின் உயரிய விருதான ஆஸ்கார் விருதை வென்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தற்போது பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இசையமைப்பதில் பிசியாக இருந்தாலும் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி, படங்களை தயாரிக்கவும் முடிவு செய்துள்ளார். அதன்படி, தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ள ஏ.ஆர்.ரகுமான், அதன்மூலம் இந்தி படம் ஒன்றை தயாரிக்கவுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘வாழ்க்கை தரும் அனுபவங்கள், பயணங்கள் காட்டும் மனிதர்கள். நமக்குள்ளே கதைகளை உருவாக்குகிறது. எனக்குள்ளும் நிறைய கதைகளை உருவாக்கி இருக்கிறது. அவற்றில் சிறந்த ஒன்றை தேர்வு செய்து படமாக எடுக்கிறேன். இந்த படத்தில் 20 வயதுள்ள புதுமுக ஹீரோ நடிக்கிறார். இயக்குனரும் தேர்வாகி விட்டார். எனது நிறுவனத்துடன் இணைந்து ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

இந்த பணிகள் முடிந்ததும் தமிழில் படம் தயாரிக்கிறேன். ஒரே நேரத்தில் இரண்டு படங்களை தயாரிக்கும் திட்டம் உள்ளது. இதற்கான பணிகளும் தொடங்கி விட்டது. சினிமா இயக்கும் எண்ணம் இல்லை. அது பெரிய பொறுப்பு. எதை என்னால் சுமக்க முடியாது’ என்கிறார்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies