BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday, 30 July 2014

அனிருத் இசையில் சான்ஸே இல்ல வீடியோ பாடல் ஆகஸ்ட் 1-ல் வெளியீடு

இளம் இசையமைப்பாளர்களில் தற்போது அதிகம் பேசப்படுபவர் அனிருத். தனுஷ் நடிப்பில் ‘3’ படத்தில் இடம்பெற்ற ‘கொல வெறி...’ பாடல் மூலம் அறிமுகமாகி பிரபலமானர். அப்படத்தை தொடர்ந்து ‘எதிர் நீச்சல்’, ‘வணக்கம் சென்னை’ ஆகிய படங்களுக்கு இசையமைத்தார். சமீபத்தில் வெளியான ‘மான் கராத்தே’ படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்று கொடுத்தது.

இப்படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் ‘கத்தி’ படத்திற்கு இசையமைத்து வருகிறார். அதன்பிறகு கார்த்தி நடிக்கும் ‘கொம்பன்’ படத்திலும் இவர் இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில் அனிருத்தின் இசையில் வீடியோ பாடல் ஒன்றை வெளியிடவுள்ளார். ‘சான்ஸே இல்ல’ என்னும் பெயரிடப்பட்டிருக்கும் வீடியோ பாடலை ஆகஸ்ட் 1-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் பொதுமக்கள் மத்தியில் வெளியிடவுள்ளார். இந்தப் பாடலை சிம்பு-வரலட்சுமி நடிப்பில் வெளியான ‘போடா போடி’ படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.

ஏற்கனவே அனிருத், தனுஷுடன் இணைந்து சச்சின் பற்றிய வீடியோ பாடல் ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றது. அந்த வரிசையில் இந்த வீடியோ பாடலும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies