ரஷ்யாவில் 2018 ஆம் ஆண்டு நடக்கவுள்ள உலகக்கிண்ண கால்பந்து போட்டியில் பிரேசில் நிச்சயம் கிண்ணத்தை வெல்லும் என நெய்மர் கூறியுள்ளார்.
பிரேசிலில் சமீபத்தில் நடந்த உலகக்கிண்ணத் தொடரில் கொலம்பியா அணிக்கெதிரான ஆட்டத்தில் காயமடைந்த நெய்மர் தொடரில் இருந்து வெளியேறினார்.
இதனால் பிரேசில் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இதனால் உலகக்கிண்ண போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரேசில் அணி அரையிறுதியில் 1-7 என்ற கோல் கணக்கில் ஜேர்மனியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறியது.
இந்நிலையில் அடுத்த உலகக்கிண்ணத்தை பற்றி பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் கூறுகையில், பிரேசில் கால்பந்து பின்னடைவை சந்தித்து இருப்பதாக நான் கருதுகிறேன். ஜேர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளை விட பின்னுக்கு நாங்கள் சென்று விட்டோம்.
உலகக்கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்பது எங்களது சிறு வயது கனவாகும். அதனை அடைய முடியாமல் போனது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அதனால் தான் நாங்கள் கண்ணீர் விட நேர்ந்தது.
நாங்கள் கிண்ணத்தை வெல்ல முயற்சி செய்தோம். ஆனால் அந்த முயற்சியில் சறுக்கல் ஏற்பட்டு விட்டது. பிரேசில் அணியின் தோல்விக்கு சிறிய விடயங்களே காரணம்.
தற்போது எனக்கு 22 வயது தான் ஆகிறது. திருமணத்தை குறித்து தற்போது நினைத்து பார்க்க முடியாது.
அடுத்த 4 வருடங்களில் (2018) ரஷ்யாவில் நடைபெறும் போட்டியில் உலகக்கிண்ண கால்பந்து போட்டியில் எங்களது உலகக்கிண்ண கனவை நனவாக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று கூறியுள்ளார்.