இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா, இங்கிலாந்தை வீழ்த்தி வரலாறு வெற்றி பெற்றது.
இந்திய அணி இந்த வெற்றியின் மூலம் பல சாதனைகளை படைத்துள்ளது.
இருவரின் சாதனை
புவனேஷ்வர் குமார் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா 2வது இன்னிங்ஸில் 7 விக்கெட்டும் சாய்த்தனர்.
ஒரே டெஸ்ட் போட்டியில் இரண்டு இந்திய பந்து வீச்சாளர்கள் தலா 6 விக்கெட்டுகள் கைப்பற்றுவது இதுவே முதல் முறையாகும்.
சிறந்த பந்து வீச்சு
இஷாந்த சர்மா ஒரே இன்னிங்ஸில் 7 விக்கெட் வீழ்த்துவது இதுவே முதன்முறையாகும். அதே போல் இந்திய வீரர் ஒருவர் இங்கிலாந்தில் 7 விக்கெட்டுகள் வீழ்த்துவது இதுவே முதன்முறையாகும்.
முன்பு 1936ம் ஆண்டில் இந்திய வீரர் அமர்சிங் 35 ஓட்டங்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் சாய்த்து இருந்ததே இந்திய வீரரின் சிறந்த பந்து வீச்சாக பதிவாகி இருந்தது.
சிறந்த அணித்தலைவர்
ஆசிய துணை கண்டத்துக்கு வெளியே அணித்தலைவர் டோனி தலைமையில் இந்திய அணி டெஸ்டில் 2011ம் ஆண்டுக்கு பிறகு ஜெயிப்பது இதுவே முதல் முறையாகும்.
15 டெஸ்ட் போட்டிகளில் கிடைக்காத வெற்றி 1,124 நாட்களுக்கு பிறகு இந்திய அணிக்கு அரங்கேறி இருக்கிறது.