இந்திய அணிக்கு தனது சுழற்பந்து வீச்சின் மூலம் பெருமை தேடி தந்தவர் ஹர்பஜன் சிங் . அவருக்கு இன்று பிறந்த நாள். அவருக்கு நமது வாழ்த்துக்கள்.
அவர் இப்போது அணியில் இல்லை என்றாலும் அவர் சிறந்த வீரர் என்பதில் சந்தேகம் இல்லை. இந்திய அணிக்காக 101 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள அவர் 413 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். 229 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 259 விக்கெட்டுகளை எடுத்து உள்ளார்.இந்திய அணிக்கு முதல் ஹாட்ரிக்கை எடுத்தவர் இவர் தான். அதனை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எடுத்தார். இவரும் கும்பளேவும் சேர்ந்து இந்தியாவின் பவுலிங் நாயகன்களாக ஜொலித்தார்கள்.
அனைவரும் இவரை செல்லமாக பாஜி என்று அழைப்பார்கள். இவர் சிறிது ஆக்ரோஷமான வீரர். எளிதில் கோபம் ஆகி விடுவார். ஐபிஎல் போட்டிகளின் போது ஸ்ரீசாந்த் பண்ண சேட்டையில் கோபமாகி அவரை அடுத்து விட்டார். அப்போது அவருக்கு சில போட்டிகளில் தடை விதிக்கப்பட்டது.
டி20 உலக கோப்பை, 2011 உலக கோப்பை வென்ற அணிகளில் இவர் இடம்பெற்று இருந்தார் என்பது இவரது சிறப்பு.

