ஆரம்பம் படத்தையடுத்து அஜித் மீண்டும் இந்த வருட ஆரம்பத்தில் கொடுத்த ஹிட் படம் வீரம்.இப்படத்தின் வெற்றியைக் கண்டு படத்தை பார்த்த பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கானுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. படத்தின் இயக்குனரான சிவாவிடம் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தற்போது இந்த படத்தை பாலிவுட்டில் எடுப்பது உறுதியாகிவிட்டது.பாலிவுட்டில் சல்மான் அஜித் வேடத்தில் நடிக்கிறார். ஆனால் இந்த படம் பாலிவுட்டில் எடுப்பதற்கு இன்னும் கொஞ்சம் காலதாமதம் ஆகும் என்று கூறப்படுகிறது.ஏனெனில், அஜித் கௌதம் மேனன் படத்தில் நடித்து வருவதால் இந்தப்படத்தை முடித்துவிட்டு வீரம் இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் மீண்டும் இணையவுள்ளார்.இப்படத்துக்காக சிவா காத்திருப்பதால் வீரம் ரீமேக் வாய்ப்பை நிறுத்தி வைத்துள்ளாராம்.

