சுடப்பட்ட மலேசிய விமானம் அருகே உக்ரைனின் போர் விமானம் பறந்ததாக ரஷ்யா புதிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது.
கடந்த 17ம் திகதி நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூர் நோக்கி வந்துகொண்டிருந்த போயிங் 777 விமானம் ரஷ்ய கிளர்ச்சியாளர்களால் கிழக்கு உக்ரைன் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
இதில் பயணித்த 298 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாய் உயிரிழந்துள்ளனர்.மேலும் இச்சம்பவத்திற்கு ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் காரணம் என உறுதியாக்கப்பட்டது.ஆனால் இதனை ரஷ்ய அரசாங்கம் முற்றிலுமாக மறுத்துள்ளது.
இதுகுறித்து ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இராணுவ தளபதி இகோர் முகசேவ் கூறியவதாவது, மலேசிய விமானம் பறந்துகொண்டிருந்த அதே நேரத்தில் தான் சுமார் 3 அல்லது 4 கிலோ மீற்றர் சுற்றளவில் உக்ரைனின் எஸ் யூ-25 போர் விமானமும் பறந்து கொண்டிருந்தது.
உக்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா ஆயுதம் ஏதும் வழங்கவில்லை. அதேபோல் 11 பக் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை இயக்குவதற்கான பயிற்சியையும் போராளுக்கு ரஷ்யா வழங்கவில்லை.
எனவே அந்த பக்-எம்1 ஏவுகணைகளை டொனெஸ்ட்ஸ்க் நகரில் நிறுத்தியது உக்ரைன் தான்.இதற்கும் ரஷ்யாவிற்கும் சம்மந்தம் இல்லை என அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
மேலும் இவ்விடயம் தொடர்பாக அமெரிக்கா ஆதாரம் இருப்பதாக கூறியுள்ளது என்றும் அப்படி ஆதாரம் இருந்தால் உரிய செயற்கைக் கோள் படங்களுடன் ஆதாரங்களை வெளியிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.