பாலிவுட் படங்கள் என்றாலே சர்ச்சைக்கு என்றும் பஞ்சம் இருக்காது. அதேபோல் தற்போது இந்தியில் விஷால் பாண்டியா இயக்கத்தில் சுர்வீன் சாவ்லா, ஜெய் பானுஷாலி உள்ளிட்டோர் நடித்துள்ள ஹேட் ஸ்டோரி 2 என்ற படத்தில் படுக்கையறை காட்சிகள், கவர்ச்சி காட்சிகள் தாராளமாக உள்ளன.இதனால் அதை பார்க்கும் குறுகிய புத்தி உள்ளவர்கள் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் செய்யக்கூடும் என்றும், படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் எனவும் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சி எம்.எல்.ஏ. ஒய்.எஸ்.வி.தத்தா கர்நாடக சட்டசபையில் தெரிவித்துள்ளார்.மேலும், தொலைக்காட்சிகளில் விளம்பரத்திற்காக ஹேட் ஸ்டோரி 2 படத்தின் டிரெய்லர், மற்றும் படுக்கையறை காட்சிகளை ஒளிபரப்ப சென்சார் போர்டு எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

